ஆப் இன்ஸ்டால் செய்வதில் ஆர்வம் காட்டும் இந்தியர்கள் – Technology News

ஆப் இன்ஸ்டால் செய்வதில் ஆர்வம் காட்டும் இந்தியர்கள்

இந்த செய்தியைப் பகிர்க

இந்தியாவில் ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் சராசரியாக 50 செயலிகளை இன்ஸ்டால் செய்வதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் தங்களது மொபைலில் குறைந்தபட்சம் ஐந்து முதல் அதிகபட்சம் 207 செயலிகளை இன்ஸ்டால் செய்கின்றனர். எனினும், சராசரியாக பெரும்பாலானோர் தங்களது ஸ்மார்ட்போனில் 51 செயலிகளை இன்ஸ்டால் செய்கின்றனர்.

சமீபத்தில் வெளியான ஆய்வு அறிக்கையின் படி இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்களது மொபைலில் சராசரியாக 51 செயலிகளை இன்ஸ்டால் செய்திருந்தாலும் அவை அனைத்தையும் அவர்கள் தொடர்ச்சியாக பயன்படுத்துவதில்லை என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப ஆய்வு நிறுவனமான டெக்ஆர்க் (techARC) வெளியிட்ட ஆய்வு அறிக்கையின் படி ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் குறைந்தபட்சம் 24 செயலிகளையே பயன்படுத்துகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனில் செயலிகளை இன்ஸ்டால் செய்வோர் அவற்றை பற்றி அதிகம் யோசிக்கவும், புரிந்துகொள்வதும் இல்லை என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஸ்மார்ட்போனில் அதிகளவு செயலிகளை இன்ஸ்டால் செய்வதால், ஸ்மார்ட்போன் இயக்கத்தை எளிதில் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. சில சமயங்களில் மொபைலில் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும் செயலிகளில் மால்வேர் இருப்பின் அவை பயன்படுத்துவோரின் விவரங்களை அம்பலப்படுத்தலாம்.

பிரிவுகளின் படி பார்க்கும் போது 70 சதவிகித பயனர்கள் சமூக வலைதள செயலிகளை இன்ஸ்டால் செய்திருக்கின்றனர். பெரும்பாலானோர் வணிகம் சார்ந்த செயலிகளான பேங்கிங் செயலிகள், வாலெட் செயலிகள் உள்ளிட்டவற்றை இன்ஸ்டால் செய்துள்ளனர்.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply