‘பாய்’ போன்று சுருட்டி வைக்கும் தொலைகாட்சிகளை அறிமுகம் செய்யும் எல்.ஜி. – Technology News

‘பாய்’ போன்று சுருட்டி வைக்கும் தொலைகாட்சிகளை அறிமுகம் செய்யும் எல்.ஜி.

இந்த செய்தியைப் பகிர்க

எல்.ஜி. நிறுவனம் ‘பாய்’ போன்று சுருட்டி வைத்துக் கொள்ளும் வகையிலான தொலைகாட்சி மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எல்.ஜி. நிறுவனம் பெரிய திரை கொண்ட புதிய டி.வி. மாடல்களை அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய டி.வி. மாடல்கள் ‘பாய்’ போன்று சுருட்டி வைத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என கூறப்படுகிறது.

புதிய டி.வி. மாடலில் 65 இன்ச் அளவில் சுருட்டக்கூடிய திரை கொண்டிருக்கும் என்றும், இதில் வழங்கப்பட்டிருக்கும் சிறிய பட்டனை க்ளிக் செய்ததும் திரை கீழ் இருந்து மேலே எழும்பும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டி.வி.யில் OLED ஸ்கிரீன்கள் பொருத்தப்பட்டு இருப்பதால், படங்கள் அதிக துல்லியமாக தெரியும் என்றும் இவை வழக்கமான எல்.சி.டி. ஸ்கிரீன்களை விட எளிமையாக மடிக்கக்கூடியதாக இருக்கிறது.

எல்.ஜி. நிறுவனத்தின் சுருட்டக் கூடிய தொலைகாட்சி மாடல்கள் அந்நிறுவனத்திற்கு விற்பனை அளவில் ஊக்கம் அளிக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சீன நிறுவங்களுடனான போட்டியை எதிர்கொள்ளவும் உதவும் என கூறப்படுகிறது. தென்கொரிய நிறுவனமான எல்.ஜி. எதிர்கால தொழில்நுட்பங்களில் அதிக கவனம் செலுத்த துவங்கி இருக்கிறது.

சீயோல் நகரில் உள்ள எல்.ஜி. ஆராய்ச்சி மையத்தில் சுருட்டக்கூடிய டி.வி.யின் ப்ரோடோடைப் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த டி.வி. பயன்படுத்தாத போது, பெட்டியில் சுருட்டி வைத்துக் கொள்ளும் வசதியை பயனர்களுக்கு வழங்குகிறது.

எல்.ஜி. தனது சுருட்டக் கூடிய டி.வி. மாடல்களை ஏற்கனவே அறிமுகம் செய்தது. எனினும், 2019 வாக்கில் வர்த்தக ரீதியில் இந்த டி.வி. மாடல்களின் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இது குறித்து எல்.ஜி. சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

சமீபத்தில் வெளியான தகவல்களின் படி தொலைகாட்சி சந்தையில் OLED ரக பேனல்களை கொண்ட டி.வி. மாடல்கள் வெறும் 1.1 சதவிகிதம் மட்டுமே பயன்பாட்டில் இருக்கிறது என தெரியவந்துள்ளது. எல்.சி.டி. ரக டி.வி.க்கள் சந்தையில் 98 சதவிகித பங்குகளை கொண்டுள்ளது. எனினும் அடுத்த ஆண்டு வாக்கில் OLED டி.வி. மாடல்களின் விநியோகம் 70 சதவிகிதம் வரை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply