12.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட சியோமி Mi நோட்புக் ஏர் வெளியானது – Technology News

12.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட சியோமி Mi நோட்புக் ஏர் வெளியானது

இந்த செய்தியைப் பகிர்க

சியோமி நிறுவனம் 12.5 இன்ச் டிஸ்ப்ளே, இன்டெல் கோர் ஐ5 பிராசஸர் கொண்ட Mi நோச்புக் ஏர் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

சியோமி நிறுவனம் 12.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட Mi நோட்புக் ஏர் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய நோட்புக் மாடல் இன்டெல் கோர் ஐ5 பிராசஸர் கொண்டுள்ளது. சியோமியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் ஜெ.டி. வலைத்தளங்களில் புதிய Mi நோட்புக் முன்பதிவு செய்யப்படுகிறது.

பிராசஸர் தவிர புதிய Mi நோட்புக் மாடலில் 4 ஜி.பி. ரேம், 4ஜி கனெக்டிவிட்டி மற்றும் அதிகபட்சம் 256 ஜி.பி. மெமரி கொண்டுள்ளது. இதன் விலை CNY 3,999 (இந்திய மதிப்பில் ரூ.40,500) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சியோமி Mi நோட்புக் ஏர் ஜஸ்ட் சில்வர் நிற வேரியன்ட் தற்சமயம் முன்பதிவு செய்யப்படுகிறது. முதற்கட்டமாக CNY 100 செலுத்தி பயனர்கள் தங்களுக்கான நோட்புக் மாடலை முன்பதிவு செய்யலாம்.

சியோமி Mi நோட்புக் ஏர் சிறப்பம்சங்கள்:

– 12.5 இன்ச் 920×1080 பிக்சல் டிஸ்ப்ளே
– விண்டோஸ் 10 ஹோம் எடிஷன்
– இன்டெல் கோர் ஐ5 பிராசஸர்
– இன்டெல் ஹெச்.டி. கிராஃபிக்ஸ் 615
– 4 ஜி.பி. ரேம்
– 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி.
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 1 எம்.பி. வெப் கேமரா
– 8 மணி நேர வீடியோ பிளேபேக்
– 1சி ஃபாஸ்ட் சார்ஜ் வசதி
– யு.எஸ்.பி. டைப்-சி போர்ட்
– யு.எஸ்.பி. 3.0 போர்ட்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
– ப்ளூடூத் 4.1, வைபை 802.11ac

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply