Lamborghini Huracán Performante இன் சிறப்பம்சங்கள்! – Technology News

Lamborghini Huracán Performante இன் சிறப்பம்சங்கள்!

இந்த செய்தியைப் பகிர்க

உலகின் அதி சிறந்த கார் வகைகளுள் Lamborghini நிறுவனத்தின் கார்களும் உள்ளடங்குகின்றன.

இந்நிறுவனம் தற்போது Huracán Performante எனும் புதிய காரினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஜெனீவாவில் இடம்பெற்ற International Motor Show நிகழ்வில் இக் காரின் சிறப்பம்சங்கள் சில வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி 5.2 Litre V10 இயந்திரத்தினைக் கொண்டுள்ளதுடன், 640 குதிரை வலுவினை உடையதாகவும் காணப்படுகின்றது.

மேலும் ஓய்விலிருந்து மணிக்கு 100 கிலோ மீற்றர்கள் எனும் வேகத்தினை 2.9 செக்கன்களில் அடையக்கூடியதாக இருக்கின்றது.

அத்துடன் இக் காரின் உச்ச பட்ச வேகம் மணிக்கு 325 கிலோ மீற்றர்களாகவும் காணப்படுகின்றது.

எனினும் இதன் விலை தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply