219 இன்ச் அளவில் புதிய டி.வி.யை அறிமுகம் செய்த சாம்சங் – Technology News

219 இன்ச் அளவில் புதிய டி.வி.யை அறிமுகம் செய்த சாம்சங்

இந்த செய்தியைப் பகிர்க

சாம்சங் நிறுவனம் சரவ்தேச நுகர்வோர் மின்சாதன விழாவில் 219 இன்ச் அளவில் புதிய டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.

சாம்சங் நிறுவனம் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் (சி.இ.எஸ். 2019) புதிய தொலைகாட்சிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் சி.இ.எஸ். 2019 விழாவில் சாம்சங் சிறிய அளவில் துவங்கி, பெரிய அளவுகளில் மைக்ரோ எல்.இ.டி. மாட்யூலர் பேனல்களை அறிமுகம் செய்துள்ளது.

அந்த வரிசையில் சாம்சங் நிறுவனம் தி வால் என்ற பெயரில் 219 இன்ச் அளவு கொண்ட டிஸ்ப்ளேவை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங்கின் புதிய பேனல்களில் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் அமேசான் அலெக்சா போன்ற வசதிகளை வழங்கும். எனினும், இதற்கு உங்களிடம் இந்த வசதிகளை சப்போர்ட் செய்யும் ஸ்பீக்கர் இருக்க வேண்டும்.

புதிய 219 இன்ச் வால் மைக்ரோ எல்.இ.டி. தொழில்நுட்பத்தில் சாம்சங் தன்னால் முடிந்தவற்றை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கில் அமைந்சிருக்கிறது. இத்துடன் 75 இன்ச் அளவில் சாம்சங் சிறிய ரக மைக்ரோ எல்.இ.டி. பேனல் ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது. 75 இன்ச் பேனலில் 4K வசதி வழங்கப்பட்டுள்ளது.

ஐடியூன்ஸ் மூலம் திரைப்படங்களை வழங்குவதுடன், ஸ்மார்ட் டி.வி. ஆப் மூலம் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை வழங்குவதற்கான அறிவிப்பை தொடர்ந்து சாம்சங் நிறுவனம் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் அமேசான் அலெக்சா உள்ளிட்டவற்றுக்கான வசதியை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதன் மூலம் பயனர்கள் டி.வி.யின் அடிப்படை அம்சங்களை குரல் மூலமாகவே இயக்க முடியும். ஒருவேளை ஸ்மார்ட் ஸ்பீக்கர் இல்லாத பட்சத்தில் டி.வி.யில் பில்ட்-இன் பிக்ஸ்பி மூலம் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply