FaceTime அப்பிளிக்கேஷனில் முக்கிய வசதியினை அதிரடியாக நிறுத்தும் ஆப்பிள் – Technology News

FaceTime அப்பிளிக்கேஷனில் முக்கிய வசதியினை அதிரடியாக நிறுத்தும் ஆப்பிள்

இந்த செய்தியைப் பகிர்க

ஆப்பிள் நிறுனம் தனது மொபைல் சாதனங்கள் ஊடாக பயனர்கள் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தி மகிழ்வதற்காக FaceTime எனும் அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்திருந்தது.

இந்த அப்பிளிக்கேஷனில் குழுக்களாக இணைந்து ஒரே நேரத்தில் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருந்தது.

எனினும் திடீரென இந்த வசதியினை நிறுத்துவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

பாதுகாப்பு குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டமையை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் இது தற்காலிகமான முடிவு எனவும் பாதுகாப்பு குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டதன் பின்னர் மீண்டும் குறித்த வசதி கிடைக்கப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் அக்டோபர் 30 ஆம் திகதி முதல் FaceTime இல் குழு அழைப்புக்களை ஏற்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply