விண்டோஸ் 10 இயங்குதளத்தில் வெப் கமராவினை செயற்படாது முடக்குவது எப்படி? – Technology News

விண்டோஸ் 10 இயங்குதளத்தில் வெப் கமராவினை செயற்படாது முடக்குவது எப்படி?

இந்த செய்தியைப் பகிர்க

ஹேக்கர்கள் எம்மை அறியாமலேயே எமது கணினிகளில் உள்ள வெப் கமெராக்களை ஆன் செய்து கண்காணிக்கும் வல்லமை உடையவர்கள்.

இதற்காகவே அனேகமானவர்கள் தமது கணினி சாதனங்களின் கமெராக்களை ஸ்டிக்கர்கள் கொண்டு மறைத்திருப்பார்கள்.

இதனை தவிர இயங்குதளங்களிலும் கமெராக்களை முடக்கி வைப்பதற்கு வசதிகள் தரப்பட்டுள்ளன.

இதன்படி விண்டோஸ் 10 இயங்குதளத்தில் கமெராக்களை முடக்குவதற்கு பின்வரும் படிமுறைகளை செயற்படுத்த வேண்டும்.

முதலில் Windows + R கீக்களை அழுத்தி Run Dialog Box-யினை திறக்கவும்.

அதில் devmgmt.msc என தட்டச்சு செய்தி Device Manager விண்டோவினை திறக்கவும்.

Device Manager விண்டோ திறந்ததும் Cameras அல்லது Imaging devices எனும் சொல்லை பயன்படுத்தி தேடவும்.

அப்போது VGA WebCam/Integrated Camera/USB என அல்லது இதனை ஒத்த செய்தி காட்டப்படும்.

அதன்மேல் Right Click செய்து Disable Device என்பதை தெரிவு செய்யவும்.

இதன் பின்னர் கமெராவின் செயற்பாடு தடைப்பட்டுவிடும்.

மீண்டும் செயற்படுத்துவதற்கு மேல்கண்ட படிமுறைகளைப் பின்பற்றி இறுதியில் Disable என்பதை Enable என மாற்றிவிடவும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply