விண்டோஸ் 10 இயங்குதளத்தினை நிறுவுவதற்கு இனி அதிக இடவசதி தேவை – Technology News

விண்டோஸ் 10 இயங்குதளத்தினை நிறுவுவதற்கு இனி அதிக இடவசதி தேவை

இந்த செய்தியைப் பகிர்க

மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் இறுதியாக அறிமுகம் செய்யப்பட்ட இயங்குதளமாக விண்டோஸ் 10 காணப்படுகின்றது.

இவ் இயங்குதளத்தினை கணினியில் நிறுவுவதற்கு 16GB தொடக்கம் 20GB வரையான சேமிப்பு வசதி தேவைப்பட்டது.

இந்நிலையில் விண்டோஸ் 10 புதிய பதிப்பு ஒன்றினை மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிடவுள்ளது.

இப் பதிப்பு எதிர்வரும் மே மாதம் அறிமுகம் செய்யப்படுகின்றது.

இப் புதிய பதிப்பினை கணினியில் நிறுவுவதற்கு மேலும் அதிக இட வசதி தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 30GB வரை இடவசதி தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ள பதிப்பானது 1903 அல்லது 19H1 என அழைக்கப்படும் என தெரிகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply