விரைவில் ரெட்மி பிராண்டு ஸ்மார்ட் டி.வி. – Technology News

விரைவில் ரெட்மி பிராண்டு ஸ்மார்ட் டி.வி.

இந்த செய்தியைப் பகிர்க

சியோமியை தொடர்ந்து ரெட்மி பிராண்டு பெயரில் புதிதாக ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2019 ஆண்டு துவக்கத்தில் சியோமியின் ரெட்மி பிராண்டு தனியாக பிரிக்கப்பட்டது. சியோமியில் இருந்து பிரிந்த ரெட்மி பிராண்டு சொந்தமாக புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இதுதவிர விண்டோஸ் இயங்குதளம் கொண்ட லேப்டாப்களை அறிமுகம் செய்தது.

அந்த வரிசையில், ரெட்மி பிராண்டு டி.வி.க்களும் இணைந்து கொள்ளும் என தெரிகிறது. ரெட்மி பிராண்டு தலைவர் வு லெய்பிங் தனது வெய்போ கணக்கில் சியோமி பிராண்டை பாராட்டும் பதிவு ஒன்றை வெளியிட்டார். சீன சந்தையில் முன்னணி டி.வி. பிராண்டாக உருவெடுத்ததற்கு சியோமியை பாராட்டிய லெய்பிங் “நாங்களும் ரெட்மி பிராண்டு டி.வி. உருவாக்க வேண்டுமா?” எனும் கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

புதிய டி.வி.க்களை அறிமுகம் செய்யும் பட்சத்தில் ரெட்மி பிராண்டு மேலும் பலப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனி பிராண்டாக பிரிக்கப்பட்டதில் இருந்து ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து லேப்டாப், அக்சஸரீக்கள், டி.வி. மற்றும் நுகர்வோர் மின்சாதன பிரிவில் களமிறங்குவதன் மூலம் சர்வதேச சந்தையில் ரெட்மி பிராண்டு மேலும் பிரபலமாகும் என தெரிகிறது. இந்தியா மற்றும் சீனாவின் டி.வி. சந்தையில் சியோமி ஏற்கனவே முன்னணி பிராண்டாக இருக்கிறது.

சீன சந்தையில் மட்டும் ரெட்மி தனியாக டி.வி.க்களை உருவாக்க திட்டமிட்டிருக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. முதற்கட்டமாக உள்ளூர் சந்தைக்கான டி.வி.க்களை மட்டும் ரெட்மி அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply