பயனர்களின் தகவல்களை வேறு நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ளும் டுவிட்டர் – Technology News

பயனர்களின் தகவல்களை வேறு நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ளும் டுவிட்டர்

இந்த செய்தியைப் பகிர்க

இன்று உலக அளவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகின்றது.

இதன் காரணமாக பல நிறுவனங்களும் தமது உற்பத்திகளை சமூகவலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்வதற்கு ஆர்வம்காட்டி வருகின்றன.

இப்படியிருக்கையில் சில சமூகவலைத்தளங்கள் தமது விளம்பர ஒப்பந்ததாரர்களுடன் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பரிமாறி வருகின்றனர்.

டுவிட்டர் நிறுவனமும் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டுவருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

பயனர்களின் அனுமதியின்றியே தகவல்கள் இவ்வாறு பரிமாறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனர்களின் விருப்பங்கள், எதிர்பார்ப்புக்களின் அடிப்படையிலேயே தற்போது அதிகமான விளம்பரப்படுத்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே விளம்பரதாரர்களை தக்க வைப்பதற்கு டுவிட்டர் நிறுவனம் இவ்வாறு பயனர் தகவல்களை அந்நிறுவனங்களுக்கு வழங்கி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply