அசத்தல் அம்சங்களுடன் கேலக்ஸி புக் எஸ் அறிமுகம் – Technology News

அசத்தல் அம்சங்களுடன் கேலக்ஸி புக் எஸ் அறிமுகம்

இந்த செய்தியைப் பகிர்க

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி புக் எஸ் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ஸ்னாப்டிராகன் 8cx 7 என்.எம். பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் கேலக்ஸி புக் எஸ் சாதனத்தையும் அறிமுகம் செய்துள்ளது. புதிய சாதனம் விண்டோஸ் 10 இயங்குதளம் மற்றும் ஸ்னாப்டிராகன் 8cx பிராசஸர் கொண்டிருக்கிறது.

13.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. டச் டிஸ்ப்ளே, பிரத்யேக ஆர்ச் ஃபிரேம் சாதனத்தை திறக்கும் போதும், மூடும் போது பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது. இதன் மேல்புறம் பிரீமியம் அனோடைஸ் செய்யப்பட்ட அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 6.2 எம்.எம். அளவு தடிமனாக இருக்கிறது.

கேலக்ஸி புக் எஸ் சாதனத்தில் கைரேகை மூலம் விண்டோஸ் ஹெல்லோ இன்ஸ்டன்ட் சைன்-இன் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏ.கே.ஜி. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் வசதி கொண்டிருக்கிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 23 மணி நேர பேக்கப் வழங்குகிறது.

சாம்சங் கேலக்ஸி புக் எஸ் சிறப்பம்சங்கள்:

– 13.3 இன்ச் 1920×1080 பிக்சல் FHD TFT (16:9) 10-பாயின்ட் மல்டி-டச் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8cx 7 என்.எம். பிராசஸர்
– 8 ஜி.பி. (LPDDR4X) ரேம்
– 256 ஜி.பி. / 512 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– விண்டோஸ் 10 ஹோம் / ப்ரோ
– 720 பிக்சல் ஹெச்.டி. கேமரா
– கைரேகை மூலம் விண்டோஸ் ஹெல்லோ சைன்-இன் வசதி
– கைரேகை சென்சார், ஹால் சென்சார், லைட் சென்சார்
– ஏ.கே.ஜி. ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம்
– 4ஜி எல்.டி.இ. கேட்.18, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப் – சி
– 42Wh பேட்டரி

சாம்சங் கேலக்ஸி புக் எஸ் எர்தி கோல்டு மற்றும் மெர்குரி கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 999 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 70,835) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply