பாப்-அப் கேமரா கொண்ட ஹானர் ஸ்மார்ட் டி.வி. அறிமுகம் – Technology News

பாப்-அப் கேமரா கொண்ட ஹானர் ஸ்மார்ட் டி.வி. அறிமுகம்

இந்த செய்தியைப் பகிர்க

ஹூவாயின் ஹானர் பிராண்டு பாப்-அப் கேமரா கொண்ட ஹானர் விஷன் டி.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது.

ஹூவாயின் ஹானர் பிராண்டு ஹார்மனிஒ.எஸ். கொண்ட முதற்கட்ட சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. ஹானர் விஷன் மற்றும் ஹானர் விஷன் ப்ரோ என அழைக்கப்படும் புதிய பொருட்கள் ஸ்மார்ட் ஸ்கிரீன் சாதனங்கள் என அந்நிறுவனம் அழைக்கிறது. எனினும், இவை பல்வேறு அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட் டி.வி.க்கள் ஆகும்.

ஹானர் விஷன் மற்றும் ஹானர் விஷன் ப்ரோ மாடல்கள் 55-இன்ச் 4K யு.ஹெச்.டி. ஸ்கிரீன், குவாட்கோர் ஹோங்கு 818 சிப் கொண்டிருக்கின்றன. சீனாவில் இவை அடுத்த வாரம் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. இவற்றின் சர்வதேச வெளியீடு பற்றி ஹானர் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

ஹானர் விஷன் மற்றும் ஹானர் விஷன் ப்ரோ மாடல்களில் 55-இன்ச் 4K (3840×2160 பிக்சல்) டிஸ்ப்ளே, ஜெர்மன் டி.யு.வி. ரெயின்லேண்ட் லோ புளு-ஐ பாதுகாப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட் டி.வி.க்களில் மூன்று புறங்களிலும் பெசல்-லெஸ் ஃபுல் வியூ வடிவமைப்பு கொண்டிருக்கிறது.

இரு ஹானர் விஷன் மாடல்களிலும் ஹோங்கு 818 குவாட்-கோர் பிராசஸர், மாலி-G51 GPU மற்றும் 2 ஜி.பி. ரேம் கொண்டிருக்கின்றன. பிராசஸருடன் ஏழடுக்கு இமேஜ் பிராசஸிங் தொழில்நுட்பம், மோஷன் எஸ்டிமேட், மோஷன் காம்பென்சேஷன், ஹை டைனமிக் ரேன்ஜ் இமேஜிங், சூப்பர் ரெசல்யூஷன், நாய்ஸ் ரெடக்‌ஷன், டைணமிக் காண்ட்ராஸ்ட் இம்ப்ரூவ்மென்ட் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஹானர் விஷன் டி.வி.யில் 16 ஜி.பி. மெமரியும், ஹானர் விஷன் ப்ரோ மாடலில் 32 ஜி.பி. மெமரியும் வழங்கப்பட்டுள்ளன. இவை ஹார்மனிஒ.எஸ். 1.0 இயங்குதளம் கொண்டிருக்கின்றன. இத்துடன் ப்ளூடூத் 5, வைபை, மூன்று ஹெச்.டி.எம்.ஐ. போர்ட், ஒரு யு.எஸ்.பி. 3.0 மற்றும் ஈத்தர்நெட் போர்ட் வழங்கப்பட்டுள்ளன.

ஹானர் விஷன் விலை CNY 3,799 (இந்திய மதிப்பில் ரூ. 38,200) என்றும் பாப்-அப் கேமரா கொண்ட ஹானர் விஷன் ப்ரோ விலை CNY 4,799 (இந்திய மதிப்பில் ரூ. 48,200) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply