உலகில் எந்த ஒரு மூலையில் இருப்பவருக்கும் பைல்களை அனுப்ப உதவும் “பயர்பொக்ஸ் சேன்ட்” – Technology News

உலகில் எந்த ஒரு மூலையில் இருப்பவருக்கும் பைல்களை அனுப்ப உதவும் “பயர்பொக்ஸ் சேன்ட்”

இந்த செய்தியைப் பகிர்க

எமது கணினியில் அல்லது ஸ்மார்ட் போனில் இருக்கும் வீடியோ, ஆடியோ, அல்லது டாகுமென்ட் போன்ற ஏதாவது ஒன்றை இன்னும் சாதனத்துக்கு அனுப்ப நாம் ப்ளூடூத் அல்லது வை-பை டைரக்ட் போன்ற வசதிகளை பயன்படுத்தி வருகின்றோம்.

எனினும் அனுப்பக்கூடிய சாதனமும் பெறக்கூடிய சாதனமும் அருகருகில் இருந்தால் மாத்திரமே இது சாத்தியப்படும்.

என்றாலும் உலகில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் எமது உறவினர் அல்லது நண்பர் ஒருவருக்கு ஒரு பைலை அனுப்ப வேண்டிய தேவை ஏற்பட்டால் அதற்கு இணையம் மாத்திரமே எமக்கு கை கொடுக்கும்.

அந்தவகையில் இணையத்தின் ஊடாக 2.5 ஜிபி வரையான பைல்களை பாதுகாப்பாக பகிர்ந்துகொள்ள உதவுகின்றது நாம் கீழே வழங்கியுள்ள “பயர்பொக்ஸ் சேன்ட்” எனும் இணையத்தளம்.

பயர்பொக்ஸ் சேன்ட்:
முன்னணி இணைய உலாவிகளுள் (Web Browsers) ஒன்றான பயர்பொக்ஸ் இணைய உலாவியை நிர்வகிக்கும் மொசில்ல பயர்பொக்ஸ் நிறுவனம் இந்த சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

அனுப்ப வேண்டிய பைல்களை இந்த தளத்தில் பதிவேற்றம் (Upload) செய்வதன் மூலம் அவற்றை பாதுகாப்பாக உரிய நபருக்கு சென்றடையச் செய்ய முடியும்.

இந்த சேவையை பயன்படுத்துவதற்கு நீங்கள் கணக்குகள் எதனையும் உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. கணக்கொன்றை உருவாக்காமல் 1ஜிபி வரையான பைல் ஒன்றை தரவேற்றம் செய்து பகிர முடியும்.

எனினும் இதில் இலவச கணக்கொன்றை உருவாக்கிக் கொள்வதன் மூலம் நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல் 2.5ஜிபி வரையான பைல்களை ஏனையவர்களுடன் இலவசமாக பகிர்ந்து கொள்ளலாம்.

இதன் ஏனைய சிறப்பம்சங்கள்:

எண்ட் டு எண்ட் என்கிர்ப்ஷன் எனும் பாதுகாப்பு அம்சம் இதில் வழங்கப்பட்டுள்ளதால் எமது தனிப்பட்ட தகவல்களை கூட அச்சமின்றி இணையத்தின் ஊடாக அனுப்ப முடியும்.

அனுப்பக்கூடிய பைல் ஒன்றுக்கு பாஸ்வேர்ட் இட்டு பாதுகாக்க முடியும்.

நீங்கள் அனுப்பக்கூடிய பைல் குறிப்பிட்ட ஒரு அளவு பதிவிறக்கம் செய்யப்பட்ட பின்னர் அல்லது குறிப்பிட்ட ஒரு கால எல்லையின் பின்னர் தானாக அழியும் வகையில் அமைக்க முடியும்.

கணினி, ஆண்ட்ராய்டு, ஐபோன் ஆகிய எந்த ஒரு சாதனம் மூலமும் மிக இலகுவாக இதனை பயன்படுத்தலாம்.
பயன்படுத்துவது மிகவும் இலகு.

பயர்பொக்ஸ் சேன்ட்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply