ஆண்ட்ராய்டு போனில் தோன்றும் பாப்-அப் விளம்பரங்களை நீக்குவது எப்படி? – Technology News

ஆண்ட்ராய்டு போனில் தோன்றும் பாப்-அப் விளம்பரங்களை நீக்குவது எப்படி?

இந்த செய்தியைப் பகிர்க

நீங்களும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவரா?

அப்படியாயின் உங்களது ஆண்ட்ராய்டு போனின் திரை முழுவதையும் மறைக்கும் விளம்பரங்களை நீங்கள் அடிக்கடி பார்த்திருக்கக் கூடும்.

உங்கள் ஆண்ட்ராய்டு போனில் நிறுவப்பட்டிருக்கும் ஏதாவது ஒரு ஆப் மூலமே அந்த விளம்பரங்கள் காண்பிக்கப்படும்.

அவ்வாறான பாப்-அப் விளம்பரங்களை காண்பிக்கும் ஆப் எது என்பதை அறிந்து கொள்ள உதவுகின்றது நாம் இங்கே வழங்கியுள்ள ஆப்.

ஃபுல் ஸ்க்ரீன் (Full Screen) விளம்பரங்கள்:

ஃபுல் ஸ்க்ரீன் விளம்பரங்கள் இன்று ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் தொந்தரவு அளிக்கக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது.

நாம் செயலிகளை பயன்படுத்தாத போதும் இவ்வாறான விளம்பரங்கள் காண்பிக்கப்படுவது எரிச்சலூட்டும் ஒரு நிகழ்வாகும்.

மேலும் இதன் காரணமாக எமது போனின் பேட்டரியும் விரைவில் காலியாகிவிடும்.

எனவே இது போன்ற சிரமங்களை தவிர்த்து முழுத் திரை விளம்பரங்களை காண்பிக்கும் செயலிகளை கையும் களவுமாக பிடிக்க உதவுகின்றது ஆப்வாட்ச் எனும் செயலி.

ஆப்வாட்ச்:

எமது ஸ்மார்ட் போனில் நாம் ஏராளமான அப்ளிகேஷன்-களை நிறுவி இருப்போம். அவற்றில் ஏதாவது ஒரு சில செயலிகள் மாத்திரம் நான் மேற்குறிப்பிட்டது போன்று ஃபுல் ஸ்க்ரீன் விளம்பரங்களை காண்பிக்கும். ஒவ்வொரு செயலியாக சோதித்து அந்த ஃபுல் ஸ்க்ரீன் விளம்பரங்களை காண்பிக்கும் செயலியை அறிவது சற்று சிரமம்.

எனவே திரை முழுவதையும் மறைத்து விளம்பரங்களை காண்பிக்கும் ஆப் எது என்பதை கண்டறிந்து கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ளது ஆப்வாட்ச் எனும் ஆண்ட்ராய்டு ஆப்.

இதனை பதிவிறக்கம் செய்து உங்கள் போனில் நிறுவியவுடன் அது உங்கள் போனில் இயங்கக்கூடிய ஒவ்வொரு செயலி தொடர்பான விபரங்களையும் பதிவு செய்யும்.

கண்டறிவது எப்படி?

உங்கள் போனில் திடீர் என ஒரு ஃபுல் ஸ்க்ரீன் விளம்பரம் தோன்றினால் உடனடியாக ஆப்வாட்ச் செயலியை திறந்து கொள்ளுங்கள். பின்னர் இறுதியாக இயங்கிய ஆப்-ஐ கண்டறியுங்கள். அதுதான் உங்களுக்கு ஃபுல் ஸ்க்ரீன் விளம்பரத்தை காண்பித்த செயலியாக இருக்கும்.

பிறகென்ன அவற்றை உங்கள் போனில் இருந்து நீக்கிவிடுங்கள். இனி உங்களுக்கு பாப்-அப் விளம்பரங்களில் இருந்து விடுதலை தான்.

அண்மையில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு முழுத் திரை விளம்பரங்களை காண்பித்து தொந்தரவு வழங்கிய ஏராளமான செயலிகளை
கூகுள் அதன் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply