மில்லியன் கணக்கானவர்களின் கைவிரல் ரேகைகள் லீக் ஆனதால் பரபரப்பு – Technology News

மில்லியன் கணக்கானவர்களின் கைவிரல் ரேகைகள் லீக் ஆனதால் பரபரப்பு

இந்த செய்தியைப் பகிர்க

உலக அளவில் பல நிறுவனங்களில் கைவிரல் அடையாள (Finger Print) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இவ்வாறு பயன்படுத்தப்படும் பல மில்லியன் கணக்கான கைவிரல் அடையாளங்கள் லீக் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல சைபர் பாதுகாப்பு நிறுவனமான VPNMentor இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

குறித்த நிறுவனம் மேலும் தெரிவிக்கையில் Biostar 2 எனும் டூலின் ஊடாகவே இந்த கைவிரல் அடையாளங்கள் அனைத்தும் லீக் ஆகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த டூலினை ஐக்கிய இராச்சியத்தின் Metropolitan Police உட்பட பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள் உலகெங்கிலும் பயன்படுத்தி வருகின்றன.

இதேவேளை கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதியே இத் தரவுகள் அனைத்தும் வெளியாகியுள்ளதாக VPNMentor நிறுவனம் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply