5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் இணையத்தில் லீக் ஆன ரெட்மி 8 – Technology News

5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் இணையத்தில் லீக் ஆன ரெட்மி 8

இந்த செய்தியைப் பகிர்க

ரெட்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இது ரெட்மி 8 பெயர் கொண்டிருக்கலாம் என தெரிகிறது.

சியோமியின் ரெட்மி பிரண்டு புதிதாக ரெட்மி 7 மற்றும் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. தற்சமயம் M1908C3IC என்ற மாடல் நம்பர் கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன் சீனாவின் TENAA வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது.

இதனுடன் இடம்பெற்ற புகைப்படத்தில் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் டாட் நாட்ச், டூயல் பிரைமரி கேமரா, பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. வடிவமைப்பில் புதிய ஸ்மார்ட்போன் அதிக மாற்றங்களை பெறாத நிலையில் கேமரா மட்டும் வித்தியாசமாக பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போனின் முன்புறம் ஸ்கிரீனின் கீழ்பகுதியில் ரெட்மி பிராண்டிங் காணப்படுகிறது. பின்புறம் கேமரா மற்றும் கைரேகை சென்சாரின் கீழ் சியோமி வடிவமைத்தது (Designed by Xiaomi) என கூறும் வாசகம் இடம்பெற்றிருக்கிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை 6.2 இன்ச் ஸ்கிரீன், 156.3×75.4×9.4mm அளவுகளில் உருவாகியுள்ளது. இது அளவில் சற்று சிறியதாகவும், ரெட்மி 7 மாடலை விட தடிமனாக இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது. முந்தைய ரெட்மி 7 மாடலில் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.

3சி சான்று பெற்றிருப்பதால், இதில் 10வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது. இந்த அம்சம் வழங்கப்படுவதால் இது ரெட்மி நோட் 8 மாடலாக இருக்காது. ரெட்மி நோட் 8 மாடலில் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 64 எம்.பி. சென்சாருடன் நான்கு பிரைமரி கேமராக்கள் வழங்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply