பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தவுள்ள விண்கல்: வெளியான அதிர்ச்சி தகவல் – Technology News

பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தவுள்ள விண்கல்: வெளியான அதிர்ச்சி தகவல்

இந்த செய்தியைப் பகிர்க

அண்டவெளியில் காணப்படும் விண்கற்கள் தொடர்பில் வானியல் ஆய்வாளர்கள் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.

அதேபோன்று பூமியில் மோதி ஆபத்து விளைவிக்கக்கூடிய விண்கற்கள் தொடர்பிலும் எச்சரிக்கையாக இருக்கின்றனர்.

இதன்படி பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என நம்பப்படும் மற்றுமொரு விண்கல் தொடர்பான அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

1990 MU எனும் விண்கல்லே இவ்வாறு பூமிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போது சூரியனைச் சுற்றி வரும் இவ் விண்கல் 2027 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 6 ஆம் திகதி பூமிக்கு மிகவும் அண்மையாக வரும் எனவும், இதன்போது ஆபத்துக்கள் ஏற்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விண்கல் ஆனது 4 தொடக்கம் 9 கிலோ மீற்றர்கள் வரையான விட்டத்தினைக் கொண்டது எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply