எமது பால்வெளியில் மாத்திரம் இத்தனை பில்லியன் கோள்களா? ஆச்சரியமான தகவல் – Technology News

எமது பால்வெளியில் மாத்திரம் இத்தனை பில்லியன் கோள்களா? ஆச்சரியமான தகவல்

இந்த செய்தியைப் பகிர்க

நாம் வாழும் பூமி காணப்படும் பால்வெளியில் பூமியைப் போன்று சுமார் 10 பில்லியன் கோள்கள் காணப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசா நிறுவனத்தின் கெப்லர் தொலைகாட்டி மூலம் பெறப்பட்ட ஆதாரங்களை ஆய்வு செய்த பென் ஸ்டேட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆச்சரியமான தகவலை வெளியிட்டுள்ளனர்.

இவை அனைத்தும் பூமியில் உள்ளதை போன்ற வெப்பநிலை மற்றும் திரவ நிலையிலுள்ள நீர் என்பவற்றினை கொண்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய தகவலானது ஏலியன்களின் இருப்பு, வாழ்விடம் தொடர்பான ஆய்விற்கு மேலும் உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை ஒட்சிசன் மற்றும் நீர் ஏனைய கிரகங்களில் இருப்பதை கண்டறிவதற்காக எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் Infrared தொழில்நுட்பத்தில் செயற்படக்கூடிய தொலைகாட்டி ஒன்று விண்வெளிக்கு ஏவப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply