அட்டகாசமான ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்தது Motorola – Technology News

அட்டகாசமான ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்தது Motorola

இந்த செய்தியைப் பகிர்க

ஒரு காலத்தில் கைப்பேசி வடிவமைப்பில் நோக்கியா நிறுவனத்திற்கு போட்டியாக திகழ்ந்த Motorola நிறுவனம் பின்னர் கைப்பேசி வடிவமைப்பில் இருந்து ஒதுங்கியிருந்தது.

எனினும் ஸ்மார்ட் கைப்பேசிகளின் வரவினை தொடர்ந்து அவ்வப்போது புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்து வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக Motorola One Action எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை தற்போது அறிமுகம் செய்துள்ளது.

இக் கைப்பேசியானது 6.3 அங்குல அளவு, 2520 x 1080 Pixel Resolution உடையதும் FHD+ தொழில்நுட்பத்தினைக் கொண்டதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

இதில் பிரதான நினைவகமாக 4GB RAM, 128GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

சேமிப்பு நினைவகமாகனது microSD கார்ட்டின் உதவியுடன் 512GB வரை அதிகரிக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.

இவை தவிர 12 மெகாபிக்சல்கள், 16 மெகாபிக்சல்கள், 5 மெகாபிக்சல்களை உடைய 3 பிரதான கமெராக்களையும், 12 மெகாபிக்சல்களைக் கொண்ட செல்ஃபி கமெராவினையும் உள்ளடக்கியுள்ளது.

259 யூரோக்கள் பெறுமதியான இக் கைப்பேசியானது Android 9.0 Pie இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக இருப்பதுடன், நீடித்து உழைக்கக்கூடிய 3500 mAh மின்கலத்தினையும் கொண்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply