பல மடங்கு துல்லியமாகப் படம்பிடிக்கக்கூடிய நவீன தொலைகாட்டி உருவாக்கம் – Technology News

பல மடங்கு துல்லியமாகப் படம்பிடிக்கக்கூடிய நவீன தொலைகாட்டி உருவாக்கம்

இந்த செய்தியைப் பகிர்க

Giant Magellan Telescope (GMT) ஆனது உலகின் மிகப்பெரிய தொலைகாட்டி. இது 2024 இல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதைப் பயன்படுத்தி வானியலாளர்கள் பண்டைய பிரஞ்சம் மற்றும் அந்நிய உயிர்கள் பற்றி ஆராய முடியும் என நம்பப்படுகிறது.

Chilean மலைத்தொடரில் கட்டுமானப் பணியாளர்கள் இவ் $US 1 பில்லியன் செயற் திட்டத்திற்காக கடந்த செவ்வாயன்று தரையை தயார்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

இறிதி சாதனம் 2 மில்லியன் பவுண்டு நிறையுள்ளது. ஆகையால் தொழிலாளிகள் 23 அடி துளைகளை பாறைப் படுக்கையில் துளைத்தவண்ணமுள்ளனர்.

இது கொன்கிறீட்டினால் நிரப்பப்பட்டு சாதனத்துக்குத் தேவையான ஆதாரத்தை வழங்க முடியும் என சொல்லப்படுகிறது.

GMT ஆனது Atacama பாலைவனத்திலுள்ள Las Campanas ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது. இப்பகுதி புவியின் உலர்வான, உயர்வான பகுதிகளில் ஒன்று.

எனவே வருடம் முழுவதும் ஆய்வாளர்களால் தெளிவான இரவு வானத்தை அவதானிக்க முடியும் என நம்பப்படுகிறது.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply