சிவப்பு நிறத்தில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் – Technology News

சிவப்பு நிறத்தில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

இந்த செய்தியைப் பகிர்க

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் சிவப்பு நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை விவரம் மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 ப்ரோ சிவப்பு நிற எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை பிளாக், புளு, கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு உள்ளிட்ட நிறங்களில் ரெட்மி நோட் 5 ப்ரோ விற்பனை செய்து வந்தது. புதிய சிவப்பு நிற எடிஷனின் பின்புறம் மற்றும் பக்கவாட்டுகளில் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 5 ப்ரோ மாடலில் 5.99 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 636 சிப்செட், 4 ஜிபி ரேம், ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், 12 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, 20 எம்பி செல்ஃபி கேமரா, ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ சிவப்பு நிற எடிஷன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வேரியன்ட் விற்பனை ஏற்கனவே துவங்கி, தற்சமயம் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக Mi.com தளத்தில் கிடைக்கும் நோட் 5 ப்ரோ மாடல் விரைவில் ப்ளிப்கார்ட் தளத்திலும் கிடைக்கும்.

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ சிறப்பம்சங்கள்:

– 5.99 இன்ச் 2160×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்
– அட்ரினோ 509 GPU
– 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் சார்ந்த MIUI 9
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX486 செனசார், f/2.2 அப்ரேச்சர், டூயல்-டோன் எல்டி பிளாஷ்
– 5 எம்பி பிரைமரி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
– 20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், f/2.2 அப்ரேச்சர், எல்இடி பிளாஷ்
– கைரேகை மற்றும் இன்ஃப்ராரெட் சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை. ப்ளூடூத்
– 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply