விரைவில் அமேசானில் விற்பனைக்கு வரும் Mi பேன்ட் 3 – Technology News

விரைவில் அமேசானில் விற்பனைக்கு வரும் Mi பேன்ட் 3

இந்த செய்தியைப் பகிர்க

சியோமி நிறுவனத்தின் Mi பேன்ட் 3 சாதனம் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் நிலையில் இதன் விற்பனை சார்ந்த விவரம் வெளியாகியுள்ளது.

சியோமி நிறுவனத்தின் Mi பேன்ட் 3 சாதனம் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், புதிய ஸ்மார்ட் ஃபிட்னஸ் பேன்ட் சாதனம் அமேசான் வலைதளத்தில் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அமேசானில் இடம்பெற்றிருந்த டீசரின் படி Mi பேன்ட் 3 சாதனம் அமேசான் வலைதளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படலாம் என தெரியவந்துள்ளது.

செப்டம்பர் 27-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் இணைக்கப்பட்ட சாதனங்களுடன் சியோமியின் புதிய Mi பேன்ட் 3 சாதனமும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய டீசரின்படி Mi பேன்ட் 3 மாடலில் ரியல்-டைம் ஃபிட்னஸ் டிராக்கிங் மற்றும் சிறப்பான பேட்டரி பேக்கப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் Mi பேன்ட் 3 முன்னதாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது.

சியோமி Mi பேன்ட் 3 சிறப்பம்சங்கள்:

– 0.78 இன்ச் OLED 128×80 பிக்சல் டிஸ்ப்ளே
– கீறல் விழாத கிளாஸ், ஆன்டி-ஃபிங்கர்ப்ரின்ட் கோட்டிங்
– போட்டோப்லெதிஸ்மோகிராஃபி (Photoplethysmography – PPG)
– இதய துடிப்பு சென்சார்
– உறக்கத்தை டிராக் செய்து, உடற்திறனை மானிட்டர் செய்கிறது
– செடன்ட்டரி ரிமைன்டர்
– 8.5 கிராம் அல்ட்ரா லைட் பாடி
– 5ATM (50 மீட்டர்) வாட்டர் ரெசிஸ்டன்ட்
– ப்ளூடூத் 4.2 LE, என்எஃப்சி (ஆப்ஷன்)
– 110 எம்ஏஹெச் லி-ஐயன் பாலிமர் பேட்டரி

சியோமி Mi பேன்ட் 3 பிளாக் நிறம் மற்றும் பேன்ட்கள் கிராஃபைட் பிளாக், ஹாட் ஆரஞ்சு மற்றும் டீப் புளு நிறங்களில் கிடைக்கிறது. Mi பேன்ட் 3 சீனாவில் 169 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.1,7890) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Mi பேன்ட் 3 என்எஃப்சி வேரியன்ட் 199 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.2,095) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply