மொபைல் போன் விலையில் புதிய ஸ்மார்ட் டி.வி.க்களை அறிமுகம் செய்த சியோமி – Technology News

மொபைல் போன் விலையில் புதிய ஸ்மார்ட் டி.வி.க்களை அறிமுகம் செய்த சியோமி

இந்த செய்தியைப் பகிர்க

சியோமி நிறுவனம் இந்தியாவில் மூன்று ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

சியோமி நிறுவனம் இந்தியாவில் Mi டி.வி. 4சி ப்ரோ, Mi டி.வி. 4ஏ ப்ரோ மற்றும் Mi டி.வி. 4 ப்ரோ ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

மூன்று புதிய ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி.க்களிலும் பேட்ச்வால் டி.வி. அனுபவம் வழங்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு டி.வி. மூலம் உருவாக்கப்பட்டு இருப்பதால் புதிய டி.வி.க்களில் கேம் மற்றும் செயலிகளை இன்ஸ்டால் செய்ய முடியும்.

இத்துடன் பில்ட்-இன் க்ரோம்காஸ்ட் வசதி வழங்கப்பட்டு இருப்பதால், மொபைலில் உள்ள தரவுகளை Mi டி.வி.யில் கண்டுகளிக்க முடியும். ப்ளூடூத் Mi ரிமோட் மற்றும் வாய்ஸ் சர்ச் வசதி இருப்பதால் ஆன்லைன் செயலிகளில் விருப்பமான தரவுகளை மிக எளிமையாக தேடி பார்க்கலாம்.

இம்முறை பேட்ச்வால் அம்சத்தில் ஜியோசினிமா, இரோஸ் நௌ, ஹூக் மற்றும் எபிக் விரைவில் அமேசான் பிரைம் வீடியோ உள்ளிட்டவை வழங்கப்படுகறது. புதிய பேட்ச்வால் அனைத்து Mi டி.வி. மாடல்களிலும் விரைவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி Mi டி.வி. 4சி ப்ரோ (32) சிறப்பம்சங்கள்:

– 32 இன்ச் 1366×768 பிக்சல் ஹெச்.டி. எல்.இ.டி. டிஸ்ப்ளே
– 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் அம்லாஜிக் பிராசஸர்
– மாலி-450 GPU
– 1 ஜி.பி. ரேம்
– 8 ஜி.பி. இன்டெர்னல் மெமரி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த பேட்ச்வால் இன்டர்ஃபேஸ்
– வைபை, ப்ளூடூத் 4.2, 3 x ஹெச்.டி.எம்.ஐ., ஏ.வி, யு.எஸ்.பி. 2.0 x 2, ஈத்தர்நெட், ஹெட்போன் ஜாக்
– MPEG1/2/4, REAL, H.265, H.264 வசதி
– 2 x 10 வாட் ஸ்பீக்கர்கள்
– ஸ்டீரியோ, டி.டி.எஸ்.

சியோமி Mi டி.வி. 4ஏ ப்ரோ (49) சிறப்பம்சங்கள்:

– 49 இன்ச் 1920×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. ஹெச்.டி.ஆர். டிஸ்ப்ளே
– 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் அம்லாஜிக் பிராசஸர்
– மாலி-450 GPU
– 2 ஜி.பி. ரேம்
– 8 ஜி.பி. இன்டெர்னல் மெமரி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த பேட்ச்வால் இன்டர்ஃபேஸ்
– வைபை, ப்ளூடூத் 4.2, 3 x ஹெச்.டி.எம்.ஐ., ஏ.வி, யு.எஸ்.பி. 2.0 x 2, ஈத்தர்நெட், ஹெட்போன் ஜாக்
– MPEG1/2/4, REAL, H.265, H.264 வசதி
– 2 x 10 வாட் ஸ்பீக்கர்கள்
– ஸ்டீரியோ, டி.டி.எஸ்.

சியோமி Mi டி.வி.4 ப்ரோ (55) சிறப்பம்சங்கள்:

– 55 இன்ச் 3840×2160 பிக்சல் 4K ஹெச்.டி.ஆர். டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் அம்லாஜிக் பிராசஸர்
– மாலி-டி830 GPU
– 2 ஜி.பி. ரேம்
– 8 ஜி.பி. இன்டெர்னல் மெமரி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த பேட்ச்வால் இன்டர்ஃபேஸ்
– வைபை, ப்ளூடூத் 4.2, 3 x ஹெச்.டி.எம்.ஐ., ஏ.வி, யு.எஸ்.பி. 3.0 x 2, யு.எஸ்.பி. 2.0 x1, ஈத்தர்நெட், ஹெட்போன் ஜாக்
– டால்பி பிளஸ் டி.டி.எஸ். சினிமா ஆடியோ

சியோமி Mi டி.வி. 4சி ப்ரோ (32) மற்றும் Mi டி.வி. 4ஏ ப்ரோ (49) விலை முறையே ரூ.14,999 மற்றும் ரூ.29,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் Mi வலைத்தளங்களில் அக்டோபர் 9-ம் தேதி துவங்குகிறது. Mi டி.வி. 4 ப்ரோ (55) மாடல் விலை ரூ.49,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அக்டோபர் 10-ம் தேதி பிளிப்கார்ட் மற்றும் Mi வலைத்தளஙங்களில் நடைபெற இருக்கிறது.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply